போப் பிரான்சிஸ் ஆலயத்தில் ஒரு நபரிடம் நடநதுக்கொணட விதம் அவர் பேய் ஓட்டினாரா என்னும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாடிகன் நகரத்தில் கடந்த ஞாயற்றிக்கிழமை கூட்டுப்பிரார்த்தனை முடிந்த பிறகு, ஆலயத்தின் வாசலில் காத்திருந்த ஒரு மாற்றுதிறனாளியின் தலையை தொட்ட போப் பிரான்சிஸ், அந்த நபரின் உடலில் இருந்து தீய சக்திகளை வெளியேற்றியது போல் ஒரு செயலை செய்தார்.
சமீபத்தில் போப்பாக பதவியேற்ற பிரான்சிஸ், செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் கூட்டுப்பிரார்த்தனை முடிந்த பின், அங்கு சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த மாற்றுதிறனாளியின் தலையை தொட்டார்.
போப்பின் கை பட்டதும் பயங்கரமாக கூச்சலிட்டு, நாற்காலியை விட்டு எழ முயன்ற அந்த நபர், பிறரால் கட்டுப்படுத்தமுடியாத அளவிற்கு அவரது உடலை அசைத்தார்.
இதுதொடர்பாக, இத்தாலிய ஆயர்களின் சபையின் தொலைகாட்சி நிலையம் நடத்திய கணக்கெடுப்பில் போப், அந்த நபரின் உடலில் இருந்து தீய சக்திகளை விரட்ட முற்பட்டிருக்கலாம் அல்லது அந்த நபருக்காக பிராரத்தனை செய்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.