தாயையும் மகளையும் திருமணம் செய்துகொண்டது, முதல் திருமணத்தை மறைத்து ஆகிய குற்றச்சாட்டுகளில்
குற்றவாளியாக காணப்பட்ட சாரதியொருவருக்கு அவிசாவளை நீதிவான் எ.எம்.எம். செனவிரத்ன மூன்று மாதகால ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு 75 ஆயிரம் ரூபா நஷ்டஈடு வழங்கும்படியும் நீதிவான் உத்தரவிட்டார்.
தெரணியகலை பகுதியைச் சேர்ந்த கொஸ்கம கோழிப் பண்ணையில் சாரதியாகப் பணிபுரிந்த ஒருவருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டது.
தெற்கு எஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 44 வயதான விதவை தாயை 2009ஆம் ஆண்டு கெட்ட பெஹத்த என்ற இடத்தில் திருமணம் முடித்த பின்னர் 2012ஆம் ஆண்டு 20 வயதான அவரது மகளையும் திருமணம் செய்து கொண்டதாக அவிசாவளை பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.