வவுனியா கனகராயன்குளத்தில் விசேட தேவையுடைய பெண் மீது பாலியல் துன்புறுத்தல் இடம்பெற்றுள்ளதாக சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ. ஜெயக்கெனடி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், கனகராயன்குளம் வடக்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கிராமத்திலேயே வீட்டில் தனியாக விசேட தேவைக்குரிய 18 வயதுடைய பெண் இருந்த சமயம், அப்பெண் மீது இச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவித்தார்.
இதேவேளை இச்சம்பவத்தினால் பாதிப்படைந்தவர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் இச்சம்பவம் தொடர்பில் பொலிசில் முறைப்பாடு செய்யப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.