இந்தியாவை சேர்ந்த இரட்டையர்கள் உலகின் உயரமான சிகரமான எவரஸ்ட் சிகரத்தின் மீது ஏறிய முதல் இரட்டையர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளனர்.
டேராடூனைச் சேர்ந்த 21 வயதான டாஷி மற்றும் நான்சி மாலிக் ஆகிய இரட்டை சகோதரிகள் எவரஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் எவரஸ்ட்டில் ஏறிய முதல் இரட்டையர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளனர்.
இந்த இரட்டைச் சகோதரிகள் நேற்று 8,848 மீட்டர் உயர எவரஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தனர். எவரஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் சவூதி பெண் என்ற பெருமையை இந்த இரட்டை.யர்களுடன் எவரஸ்ட்டில் ஏறிய ரஹா மொஹாரக்(25) பெற்றுள்ளார்.
எவரஸ்ட் சிகரத்தில் நல்ல தட்பவெட்ப நிலை இருப்பதால் நேற்று 146 பேர் சிகரத்தின் உச்சியை அடைந்தனர். மேலும் 94 பேர் இன்று சிகரத்தின் உச்சியை அடைகின்றனர்.
இவர்களைச் சேர்த்து கடந்த மே மாதம் 10 ஆம் தேதியில் இருந்து இதுவரை மொத்தம் 348 பேர் எவரஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளது குறிப்பிடத்தக்கது.