புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நியூசிலாந்தில் சிறுவன் ஒருவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 36 வயது பெண் அதனால் கர்ப்பமாகி, ஒரு குழந்தையை பெற்றெடுத்திருப்பது அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தை சேர்ந்த ஒரு சிறுவன், அவனது நண்பனின் தாயாரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானான். தனக்கு கொடுக்கப்படும் பாலியல் தொந்தரவை எதிர்த்து என்ன செய்யவேண்டுமென தெரியாத நிலையில், அச்சிறுவன் இக்கொடுமைக்கு பல நாட்களாக பலியாகியுள்ளான்.

இந்நிலையில் சிறுவனை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய அந்த 36 வயது பெண், கர்ப்பமாகி குழந்தையையும் பெற்றெடுத்தார்.

இதனால் வெளிச்சதிற்கு வந்த இந்த விஷயம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையின்போது போலீசாருக்கு பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிவந்தன.

பாதிக்கப்பட்ட சிறுவன் தொடர்பாக அவன் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறுகையில், நான் அந்த சிறுவன் என்னிடம் கூறிய தகவலை கேட்டு அதிர்ந்து போனேன். அவன் என்னிடம் 1 வருடத்திற்கு முன்னதாகவே அவன் அவனுடைய நண்பனின் தாயால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதை கூறியுள்ளான் எனத் தெரிவித்தார்.

நியூசிலாந்தில் நடைமுறையில் உள்ள சட்டத்தின் படி ஆண்கள் மீது மட்டுமே பாலியல் வன்கொடுமை சட்டம் பாயும். மேலும், ஒரு பெண் ஒரு ஆணை வற்புறுத்தி உடலுறவு வைத்துக்கொண்டால் அதிகபட்சமாக அந்த பெண்ணுக்கு 14 வருட சிறை தண்டனை கிடைக்கும்.

இதுதொடர்பாக தெரிவித்த குழந்தை நல ஆர்வலர்கள், சிறுவர், சிறுமியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

பாலியல் வன்கொடுமையால் அந்த 36 வயது பெண்ணுக்கு பிறந்த குழந்தையை ஒரு தொண்டு நிறுவனம் தத்தெடுத்துக்கொண்டு வளர்த்துவருவது குறிப்பிடத்தக்கது. 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top