தனது நண்பரின் உதவியுடன் மனைவியை கொலை செய்த இந்தியர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையை சேர்ந்தவர் அதிப் போப்பர்(வயது 24), இவரது மனைவி புஷ்ரா(வயது 23).
துபாயில் இருவரும் பணிபுரிந்தனர், அடிக்கடி தனது நண்பரை வீட்டுக்கு அழைத்து வந்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தார் போப்பர்.
இதற்கு புஷ்ரா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் புஷ்ராவின் சம்பள பணத்தை எடுத்து போப்பர் செலவு செய்துள்ளார்.
இதனால் சண்டை தீவிரமடைந்தது, ஒரு கட்டத்தில் நண்பர் உதவியுடன் மனைவியை கொன்றார் போப்பர்.
இதனையடுத்து போப்பர் இந்தியாவுக்கு தப்பி வந்து விட்டார். இந்நிலையில் வழக்கு பதிவு செய்த துபாய் பொலிஸ் இன்டர்போலின் உதவியை நாடியது.
எனவே போப்பரின் நண்பர் அலியை மும்பையில் பொலிசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து போப்பர் துபாய் பொலிசாரிடம் கடந்த வாரம் சரணடைந்தார். அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

0 கருத்து:
கருத்துரையிடுக