கொழும்பிலிருந்து புறப்பட்ட தனியார் பஸ்ஸொன்றில் பயணம் செய்த பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு பஸ்ஸிலிருந்து கீழே குதித்து தப்பி ஓட முயன்ற நபரொருவர்
படுகாயங்களுக்குள்ளாகி மரணமானார்.
கொழும்பு பெரியாஸ்பத்திரியில் இது தொடர்பான மரண விசாரணை நடைபெற்றது.
இவ்வாறு மரணமான தலங்கம எனும் இடத்தைச் சேர்ந்த 37 வயதுடைய தம்மிக புஷ்பகுமார பெரேரா என்பவரின் மரண விசாரணை கொழும்பு மாநகர திடீர் மரண விசாரணை அதிகாரியின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது சாட்சியமளித்த குறித்த தனியார் பஸ் நடத்துனர் ஆர். டீ. நிமல் தெரிவித்ததாவது,
அன்றைய தினம் மாலை கொழும்பு புறக்கோட்டையிலிருந்து புறப்பட்ட (வீதி இல: 170) தனியார் பஸ்ஸில் நான் நடத்துனராகக் கடமை செய்தேன். 5.30 மணியளவில் இது தலங்கமையை சென்றடைந்தது. பஸ்ஸில் பயணிகள் நிரம்பி காணப்பட்டனர்.
இத்தருணத்தில் பஸ்ஸின் பின்புற வாசல் ஊடாக ஒருவர் கீழே விழுவதை நான் கண்டேன். பஸ்ஸை நிறுத்தும்படி பயணிகள் சப்தமிட்டனர். பஸ். நிறுத்தப்பட்டதும் நான் அவ்விடத்திற்கு ஓடினேன்.
பஸ்ஸிலிருந்து குதித்து காயங்களுக்கு இலக்காகியிருந்த அந்நபரை சந்தியில் கடமையிலிருந்த இரு பொலிஸாரிடம் ஒப்படைத்துவிட்டு எனது பயணத்தைத் தொடங்கினேன்.
பஸ்ஸில் பயணம் செய்த பெண்ணொருவரது தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு கீழே குதித்து தப்பி ஓட முயன்ற போதே இவர் கீழே விழுந்தார் என பயணிகள் கூறினர்.
குறிப்பிட்ட பெண்ணும் அதனை என்னிடம் தெரிவித்தார்.
தலங்கம பொலிஸார் சாட்சியங்களை நெறிப்படுத்தினார்.

0 கருத்து:
கருத்துரையிடுக