நியூசிலாந்தில் பிரிட்டனை சேர்ந்த 20 வயதான டாம் ஸ்டில்வெல் என்பவர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 15 மாடியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் வேலை பார்த்த வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டதால் அவர் பக்கத்து வீட்டின் பால்கனி வழியாக அருகில் உள்ள கட்டிடத்தில் குதித்து கீழே இறங்க முயற்சி செய்து இருக்கிறார்.
ஆனால், 15-வது மாடியிலிருந்து குதித்த அவர் எதிர்பாராத விதமாக தரையில் விழுந்தார். அதிக உயரத்தில் இருந்து கீழே விழுந்த அவருக்கு தோள்பட்டை, முதுகு, மணிகட்டுகளில் எலும்பு முறிவு ஏற்பட்டதுடன் உள்காயங்களும் ஏற்பட்டன.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர கண்காணிப்பு பிரிவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறார்.
தற்பொழுது அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும், விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வீட்டினுள் அடைப்பட்ட டாம், எதிர்வீட்டு பெண்மணியிடம் "உங்கள் வீட்டுக்குள் குதித்து, அங்கிருந்து கீழே இறங்கி எனது வீட்டிற்கு சென்று விடுகிறேன்", என கேட்டதற்கு அவரும் ஒப்புக் கொண்டார்.
எனவே, டாம் இருந்த வீட்டில் இருந்து எதிர்வீட்டு பால்கனியில் தாவி குதிக்கும் போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து விட்டார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

0 கருத்து:
கருத்துரையிடுக