புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஜப்பானின் அணு உலை தொழில்நுட்பம் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் போன்ற ஒத்துழைப்பை உலக நாடுகளுக்கு வழங்குவது என ஜப்பான் பிரதமர் "ஷின்சோ அபே" உறுதி அளித்திருந்தார்.

இவர் பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டேவுடனான ஒப்பந்தத்தில் இவ்வுறுதியை அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரதமரின் இந்த முடிவுக்கு மக்களின் கருத்து எப்படி இருக்கிறது என்பதை அறிய சமீபத்தில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

இக் கருத்துக் கணிப்பில் சுமார் 60 சதவீதம் ஜப்பானிய மக்கள் பிரதமரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவருக்கு ஆதரவாக 24 சதவீதம் பேர் மட்டுமே இதனை வரவேற்றுள்ளனர்.

"ஷின்சோ அபே"வின் சொந்தக் கட்சியை சேர்ந்தவர்களில் கூட 43.2 சதவீதம் பேர் ஜப்பானிய அணு உலை தொழில் நுட்பத்தை பிற நாடுகளுக்கு தரக்கூடாது என கூறியுள்ளனர்.

அத்துடன் எதிர்க் கட்சியை சேர்ந்த 76.1 சதவீதம் பேரும் பிரதமரின் இந்த முடிவு சரியல்ல என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

2011 மார்ச்சில் புகுஷிமா அணு உலைக்கு நேர்ந்த நிலைமை மீண்டும் ஏற்படாதபடி அணு உலை தொழில் நுட்பத்தை ஜாக்கிரதையாக கையாள வேண்டும் எனவும், அனைத்து தரப்பினரும் அதனையே விரும்புவதாக அக் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top