புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கொழும்பு பல்கலைக் கழகத்தின் மருத்துவ மாணவி, மேல் மாடியில் இருந்து கீழே குதிப்பதற்கான காரணம் பரீட்சை குறித்த அழுத்தமாக இருக்கலாம் என கொழும்பு பல்கலைக் கழகத்தின் சகல பீட மாணவர் ஒன்றியம்
தெரிவித்துள்ளது.

மேல் மாடியில் இருந்து கீழே வீழ்ந்தவர் திசமாறமையைச் சேர்ந்த சஷிப்பிரபா குணவர்தன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான பரீட்சை இன்று மாலை ஆரம்பமாகவிருந்தது.

இந்த பரீட்சைக்கான மீள் பாட மீட்பு கல்வி நடவடிக்கைகள் இன்று காலை முதல் இடம்பெற்றதாக ஒன்றியத்தைச் சேர்ந்த நஜித் இந்திக தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் தேனீர் இடை வேளையின் போது, மருத்துவ மாணவி மாடியில் இருந்து குதித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top