புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஏணை கட்டியிருந்த மரம் பிள்ளையின் மீது விழுந்ததில் படுகாயமடைந்த 8 வயது பிள்ளை சிகிச்சை பலனின்றி இன்று மரணமாகியுள்ளது.
இச்சம்பவத்தில் அருள் பிரான்சிஸ் தனுஷ்காந் வயது 8 என்ற ஆண் பிள்ளையே மரணமானதாகும்.


இச்சம்பவம் தொடர்பில் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று மதியம் வீட்டிலிருந்த ஏணையில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது ஏணை கட்டியிருந்த மரம் முறிந்து குழந்தையின் மேல் விழந்துள்ளது.

இதன்போது படுகாயமடைந்த குழந்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தது.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பிள்ளை சிகிச்சை பலன்றின்றி இன்று அதிகாலை மரணமாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top