காலி, கராப்பிட்டிய வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
வேகமாக சென்ற கார் வீதியை விட்டு விலகி மின் கம்பத்துடன் மோதியதில் நேற்றுமாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
கலேகொனவிலிருந்து கராப்பிட்டிய நோக்கி பயணித்த காரே விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது படுகாயமடைந்த கார் சாரதியும் அதில் பயணித்தவரும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி 38 வயதான கார் சாரதி உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தில் காயமடைந்த 20 வயதான இளைஞன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார். காலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக