புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

உக்ரைன் நாட்டில் இருந்து லண்டனுக்கு குடிபெயர்ந்த ஒரு தம்பதியின் எட்டு வயது மகள், மூன்று அடிக்கு தனது கூந்தலை வளர்த்து சாதனை புரிந்திருக்கின்றார்.

எட்டே வயதான Bohdana Stotska என்ற சிறுமி, நாலரை உயரமே உள்ளார். ஆனால் அவரது தலைமுடி மூன்றடி உயரத்தில் இருக்கின்றது.

தனது நான்காவது வயதில் இருந்து அவர் தலைமுடி வெட்டுவதை நிறுத்திவிட்டார்.

தலைமுடியை தினமும் ஷாம்பு போட்டு வாஷ் செய்து உலர வைப்பதற்கு நான்கு மணி நேரம் செலவிடுவதாக அவரது தாயார் தெரிவித்தார்.

வங்கி அதிகாரியாக பணியாற்றும் Olga, தனது மகளின் ஆசைக்கு குறுக்கே நிற்பதில்லை என்றும் அவளது விருப்பப்படி மகளின் கூந்தலை பராமரித்து வருவதற்கு உதவி செய்வதாகவும் கூறினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top