புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

யாழ்ப்பாணம் கொண்டலடி வைரவர் கோயிலடி பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் வலதுகை துண்டிக்கப்பட்ட நிலையில் யாழ்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
தேவானந்தன் பிரசன்னா (வயது 19) என்ற இளைஞரே இவ்வாறு வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

நேற்று அதிகாலை 1 :00 மணியளவில் இந்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தலைமறைவாகியிருப்பதாகவும் அவர்களை தேடும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேற்படி கோயிலடியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இசைக்கச்சேரியின் போது நடனம் ஆடிக்கொண்டிருந்த இளைஞர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து கைகலப்பாகி வாள் வெட்டில் முடிந்துள்ளது.

வாள் வெட்டுக்கு இலக்கான குறித்த இளைஞரை சுற்றிவளைத்த சுமார் 15 பேர் கொண்ட குழு அவரை சரமாரியாக தாக்கியதுடன் வாளினாலும்  வெட்டியுள்ளனர்.

இதன்போது  வலது கை துண்டிக்கப்பட்டதுடன் தலையிலும் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனயைடுத்து காயமடைந்த இளைஞர் உடனடியாக யாழ் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top