புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தம்மைப் பிரிந்து சென்ற பீமன் வராததால் தருமர் கவலையில் மூழ்கினார்.பீமனின் மகன் கடோத்கஜனை நினைக்க அவன் தருமர் முன் தோன்றினான்.'உன் தந்தை இருக்குமிடத்திற்கு எங்களையும் அழைத்துப் போ'என்று அவர் கூற..கடோத்கஜன் அனைவரையும் தன் தந்தை
இருக்குமிடம் தூக்கிச்சென்றான்.தம்பியைக் கண்ட தருமர் அமைதியானார்.

அவர்களைக் காண குபேரன் தானே மலர்களுடன் வந்து சேர்ந்தான்.

பின் அனைவரும் பத்ரிகாச்ரமத்திற்குத் திரும்பினர்.சடாசரன் என்னும் அரக்கன் திரௌபதியைக் கவரும் எண்ணத்துடன் அவர்களிடம் வந்தான்.ஒரு சமயம் பீமன் வெளியே சென்றபோது..அவ்வரக்கன் தன் சுயரூபத்தை எடுத்துக்கொண்டு தருமர்,நகுலன்,சகாதேவன்,திரௌபதி ஆகியோரைத் தூக்கிக் கொண்டு ஓடினான்.அப்போது வந்த பீமன் இது கண்டு அவனுடன் போர் புரிந்து அவைத் தூக்கித்தரையில் எறிந்து தேய்த்துக் கொன்றான்.

சடாசுரனை வதைத்தபின்..பாண்டவர்கள்..முனிவர்களுடன் இமய உச்சியை அடைந்தனர்.அங்கு சாரணர்,சித்தர் ஆகியவர்களைக் கண்டு வணங்கினர்.அப்போது ஐந்து நிறமுடைய அழகிய மலரை திரௌபதி கண்டாள்.இது போன்று மலர் வேண்டும் என்று கேட்க ..இதுவும் குபேரனின் நாட்டில்தான் கிடைக்கும் கொண்டுவருகிறேன்'என பீமன் புறப்பட்டான்.

அங்கு மணிமான் என்ற யட்சத்தளபதியுடன் போரிட்டு...மணிமானை வீழ்த்தினான்.தம்பியைக் கண்டு தருமர் குபேரன் பகை தேவையற்றது எனக் கூறினார்.

இதற்கிடையே மானுடன் ஒருவனால் மணிமான் கொல்லப்பட்ட செய்தியறிந்து குபேரன் அங்கு வர..அவரை வணங்கிய தருமரைக்கண்டு குபேரன் சீற்றம் தணிந்தான்.'மணிமான் மரணம் பண்டை சாபத்தால் நேர்ந்தது 'என அறிந்த குபேரன் தருமருக்கு பல பரிசுபொருட்களைக் கொடுத்து வழி அனுப்பினான்.

பீமன் ஒருநாள் காட்டுக்குச்சென்றான்.புதர்களைக் காலால் மிதித்து அழித்தான்.அப்போது ஒரு மலைப்பாம்பு பீமனைப் பற்றிஸ் சுற்றிக்கொண்டது.பீமனால் விடுபட முடியவில்லை.

பராசுராமனையும்,இடும்பனையும் ஜராசந்தனனையும் கிர்மீரனையும்,மணிமானையும் வீழ்த்தியவனுக்கு அப்போதுதான் தெளிவு பிறந்தது,மனிதனின் ஆற்றலை விட விதியின் வலிமை புரிந்தது.

அப்போது பீமனைத் தேடி வந்த தருமர்..பீமன் இருக்கும் நிலை கண்டார்...பின் பாம்பினை நோக்கி'நீ யார்..? தேவனா? அசுரனா? என்றார்.

உடன் பாம்பு...'நான் நகுஷன் என்னும் மன்னன்.அகஸ்தியரின் சாபத்தால் பாம்பாகியுள்ளேன்.நீ என்னுடன் விவாதம் செய்..அதுவே என் சாப விமோசனம்'என்றது.

தன் முன்னோருள் ஒருவர் தான் நகுஷன் என அறிந்த தருமர் அப்பாம்பை வணங்க...சாப விமோசன நேரமும் வந்ததால் .நகுஷன் தருமரை ஆசீர்வதித்துவிட்டு விண்ணுலகு சென்றார்.

பீமன் ..தருமருடன்..மனித வாழ்க்கை அனுபவங்களைப்பேசிய படியே தங்கும் இடம் வந்து சேர்ந்தான்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top