புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தான் காதலித்து வந்த நபர், தனது தோழியிடமும் சகஜமாக பேசி நட்பு பாராட்டி வந்ததால் பொறாமை ஏற்பட்டு, தனது தோழியின் புகைப்படத்தையும், செல்போன்

எண்ணையும் பேஸ்புக்கில் போட்டு இவர் விபச்சாரம் செய்கிறார் என்று அவதூறு பரப்பிக் கைதான பெண் என்ஜீனியர், தான் தப்பு செய்து விட்டதாகவும், தனது தோழி தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் தற்போது அழுது புலம்பி வருகிறார்.




சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக வேலை பார்த்து வருபவர் ஹேமா. இவர் சென்னை காவல்துறை ஆணையரை அணுகி ஒரு புகார் கொடுத்தார். அதில், நான் கெளரவமான குடும்பத்தை சேர்ந்தவள். கடந்த வாரம் பேஸ்புக்கில் என்னைப்பற்றி தவறான தகவல் ஒன்றை பரப்பிவிட்டனர். என்னை ஒரு விபச்சார அழகியாக சித்தரித்து, எனது புகைப்படத்தையும், செல்போன் நம்பரையும் வெளியிட்டுவிட்டனர். உல்லாச விரும்பிகள் என்னை தொடர்பு கொண்டால், இரவை இன்பமாக கழிக்கலாம் என்று நான் அழைப்பது போலவே, வாசகங்களையும் வெளியிட்டுவிட்டனர்.




இதைப்பார்த்து எனது செல்போனில் ஏராளமான ஆண்கள், என்னை உல்லாசத்துக்கு அழைத்தனர். என்னால் பதில் சொல்ல முடியவில்லை. நான் அப்படிப்பட்ட பெண் அல்ல. தவறான தகவலை, பேஸ்புக்கில் வெளியிட்டுவிட்டனர் என்று நானும், பதில் சொல்லி முடியவில்லை. ஒரு கட்டத்தில் எனது செல்போனை ஸ்விட்ச் ஆப்செய்து விட்டேன். தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் கூட வந்தது. அலுவலகத்திலும் என்னை ஒரு மாதிரியாக பார்த்ததால் வேலைக்கும் போக முடியவில்லை.




இந்த இழிவான செயலில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். மேலும் தனது அலுவலகத்தைச் சேர்ந்த யாரோதான் இந்த செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று சந்தேகிப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.




இதையடுத்து இணை ஆணையர் சேஷசாயி தலைமையில் சைபர் கிரைம் போலீஸார் களத்தில் குதித்தனர். தீவிர விசாரணையில் ஹேமா குறித்து அவதூறாகத் தகவல் பரப்பியவர் அதே அலுவலகத்தில் பணியாற்றி வருபவரும், ஹேமாவின் நெருங்கிய தோழியுமான 26 வயது சிந்துஜா பிரியதர்ஷினி என்று தெரிய வந்து அனைவரும் அதிர்ந்தனர். குறிப்பாக ஹேமா பெரும் அதிர்ச்சி அடைந்தார்.




ஏன் இப்படிச் செய்தார் சிந்துஜா?




சிந்துஜாவும், ஹேமாவும் நெருங்கிய தோழிகள். அதே அலுவலகத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணியாற்றிய அருண்குமார் இவர்கள் இருவருக்கும் நல்ல நண்பராக இருந்தார். இதில் சிந்துஜாவும், அருண்குமாரும் காதலித்துள்ளனர். அதேசமயம், ஹேமாவுடனும் நல்ல நட்புடன் பழகி வந்துள்ளார் அருண்குமார். அது சிந்துஜாவுக்குப் பிடிக்கவில்லை. தன்னிடமிருந்து அருண்குமாரை ஹேமா பிரித்து விடுவாரோ என்று பயந்துள்ளார். இதனால்தான் ஹேமாவைப் பற்றி அவதூறாக செய்தி போட்டு விட்டார்.




கைது செய்யப்பட்ட சிந்துஜா போலீஸில் கொடுத்த வாக்குமூலத்தில், ஹேமா எனது உயிர்த்தோழி. ஆனால் நான், அவருக்கு துரோகம் செய்து மன்னிக்க முடியாத குற்றத்தை செய்துவிட்டேன். எங்களுடன் வேலைபார்த்த என்ஜினீயர் அருண்குமாரை, நான் காதலித்தேன். ஹேமாவுக்கும் அவர் நன்கு அறிமுகமானவர்தான். நாங்கள் 3 பேரும், ஒன்றாக சுற்றுவோம். ஹோட்டலில் சாப்பிடுவோம்.




என்னை, அருண்குமாரும் காதலித்தார். எனக்கும், அவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்க உள்ளது. நிச்சயதார்த்தம் கூட நடந்துவிட்டது. இந்த நேரத்தில்தான் விபரீத சந்தேகம் என்னுள் முளைத்தது. எனக்கு கணவராக வரப்போகிறவர் எனக்கு மட்டும்தான் சொந்தமாக இருக்க வேண்டும், அவர் என்னோடு மட்டும்தான் பேசி, பழக வேண்டும் என்று நினைத்தேன்.ஆனால் அவர் ஹேமாவோடும் வழக்கமான நட்போடு பேசி பழகினார். இது எனக்கு பிடிக்கவில்லை.




பேசுவதை நிறுத்திக்கொள்ளுமாறு ஹேமாவிடம் மறைமுகமாக சொல்லிப் பார்த்தேன். ஆனால் ஹேமா அதை கேட்கவில்லை. எனக்கு தெரியாமலேயே ஹேமா, அருண்குமாரோடு சென்று ஹோட்டலில் சாப்பிட்டாள். இது எனக்கு கோபத்தை உண்டாக்கியது. எனக்கு உரியவரை ஹேமா அபகரித்து கொள்வாளோ என்று நான் பயந்தேன்.




ஹேமாவோடு பழகுவதை நிறுத்த வேண்டும் என்று எனது வருங்கால கணவரிடமும் நான் சொன்னேன். ஆனால் அவரும் அதை பொருட்படுத்தவில்லை. மாறாக ஹேமாவின் அழகை வர்ணித்து, என்னிடம் வெறுப்பேற்றினார். ஒரு கட்டத்தில் ஹேமாவை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறினார். அவர் விளையாட்டாகத்தான் அவ்வாறு சொன்னார் என்பது பின்னால்தான் தெரிந்தது. ஆனால் அதற்குள் ஹேமாவை பேஸ்புக்கில் இழிவுபடுத்தி தகவல்களை வெளியிட்டு விட்டேன்.




எனது தவறை ஹேமா மன்னிக்க வேண்டும். எனது வருங்கால கணவரும், என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆனால் ஹேமா, சிந்துஜாவை மன்னிக்க முடியாது என்று கூறி விட்டார், புகாரையும் திரும்பப் பெற மறுத்து விட்டார். இதையடுத்து சிந்துஜாவைக் கைது செய்த போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.




கதறி அழுது கண்ணீர் விட்டபடி சிந்துஜா சிறைக்குப் போனது பார்க்கவே பரிதாபமாக இருந்தது. ஆனால் விளையாட்டுக்குக் கூட இதுபோன்ற குற்றத்தை யாரும் தயவு செய்து செய்ய வேண்டாம் என்று போலீஸ் இணை ஆணையர் சேஷசாயி அறிவுறுத்தியுள்ளார்.




சிந்துஜா செய்த தவறு நிரூபிக்கப்பட்டால் அவருக்குத் தகவல் தொழில்நுட்பச் சட்டப்படி 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top