புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அர்ச்சுனனை பிரிந்த சகோதரர்கள் அவரை மீண்டும் எப்போது காண்போம் என்றிருந்தனர்.அப்போது ..இந்திர உலகத்திலிருந்து ஒரு தேர் வந்தது.அதில் வந்திறங்கிய அர்ச்சுனன் ...தன் தேவலோக அனுபவங்களை ...சிவபெருமானிடம் பாசுபதக்கணை பெற்றது...நிவாத
கவசர்களைக் கொன்றது..காலக்கேயர்களை அழித்தது என எல்லாவற்றையும் சொன்னான்.அனைவரும் மகிழ்ந்தனர்.

இந்நிலையில் வனவாசம் பத்து வருடங்கள் ஓடிவிட்டது..மீதம் இரண்டு ஆண்டுக்காலம் அவர்கள் காம்யகம் முதலிய வனங்களில் சஞ்சரித்தனர்.

அப்போது அவர்களைச் சந்திக்க சத்திய பாமாவுடன் கண்ணன் வந்தார்.அனைவரும் வணங்கி மகிழ்ந்தனர்.பாண்டவர்கள்..பாஞ்சால நாட்டில் இருக்கும் உப பாண்டவர்களின் நலனையும்..துவாரகையில் இருக்கும் சுபத்திரை...அபிமன்யு நலத்தையும் கிருஷ்ணரிடம் கேட்டு அறிந்தனர்.

அத்தருணத்தில் ...தவ முனிவர் மார்க்கண்டேயர் வந்தார்...தொடர்ந்து நாரதரும் வந்தார்.

மார்ககண்டேயர் புண்ணியக்கதைகளைக் கூறினார்.'ஒவ்வொரு உயிரும் தான் செய்த நல்வினை ...தீவினைப் பயன்களை அனுபவிக்கின்றன.வினையின் பிடியிலிருந்து யாருமே தப்பிக்க இயலாது..எத்தனை பிறவி எடுத்தாலும் வினைப்பயன் தொடர்ந்து வந்து பயனைத் தரும்.

வரும் காலத்தில் பன்னிரு சூரியர்களின் வெப்பத்தைத் தாங்காது உயிரினங்கள் துன்புறும்.கடல் நீர் நிலைகள்..அனைத்தும் வற்றிவிடும்.புல் பூண்டு ..மரம் ஆகியவை அனைத்தும் தீயால் கருகி விடும்.ஓயாது மழை பொழியும்..ஊழிக்காற்று எழுந்து பிரளயத்தை ஏற்படுத்தும்...உலகு அழியும்.பின் கண்ணபிரான் மீண்டும் உலகையும் உயிரினங்களையும் படைப்பார்..காப்பார்.

மறுபடியும் ஒரு ஊழிக்காலத்தில் உலகை அழிப்பார்.இப்படிப் படைப்பதும்..காப்பதும்..அழிப்பதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.இதுதான் இறைவனின் மகிமை'என பல கதைகளைக் கூறினார்.

எல்லாவற்றையும் கேட்டு அனைவரும் இன்பம் அடைந்தனர்.எல்லோரும் அறநெறியில் நிற்கவேண்டும் என மார்க்கண்டேயர் எடுத்துரைத்தார்.

காம்யக வனத்தில் பல நாட்கள் தங்கியிருந்தபின் கிருஷ்ணர் ..பாண்டவர்க்கு நல்லாசி வழங்கிச் சத்தியபாமாவுடன் துவாரகை திரும்பினார்.மார்க்கண்டேயரும் விடைபெற்றார்.

பல திருத்தலங்களுக்குச் சென்று திரும்பிய அந்தணன் ஒருவன்...காம்யக வனத்தில் பாண்டவர்களை சந்தித்து அவர்களது நிலைமையை அறிந்தான்.அவன் அஸ்தினாபுரம் சென்று திருதிராட்டினனைக் கண்டு பாண்டவர்களின் மேன்மையைக் கூறினான்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top