புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அழகை விரும்பாதவர்கள் இந்த உலகில் எவரும் இருக்க மாட்டார்கள். தற்போதுள்ள இளம் பெண்கள் முகப்பரு, வெள்ளைப்புள்ளிகள், கரும்புள்ளிகள் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கு நமது சருமத்தின் இயற்கைத் தன்மையே காரணமாகும்.


அதிலும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் தான் மிகுந்த பிரச்சனைகளுக்கு ஆளாவார்கள்.

முகப்பரு

பொதுவாக முகப்பருவானது டீனேஜ் பருவத்தில் தான் வரத் தொடங்கும். ஏனெனில் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதால் ஏற்படுகிறது.

ஆகவே இந்த முகப்பரு வராமலிருக்க க்ரீம்களை பயன்படுத்துவதை விட, ஒரு சில நல்ல உணவுகளை சாப்பிடுவது நல்லது.

அதற்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், பிஸ்கட், ஸ்வீட், கேக், குளிர் பானங்கள் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

அதிலும் கொக்கோ நிறைந்த உணவுகளான டீ, காபி போன்றவற்றை அளவாக குடிக்க வேண்டும்.

பழங்கள், காய்கறிகள், மீன், முட்டை, பால், புரோட்டீன் போன்ற உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். மேலும் ஒரு நாளைக்கு 4-5 முறை முகத்தை கழுவ வேண்டும்.

வாரத்திற்கு ஒரு முறை ஆவி பிடிக்க வேண்டும். முகப்பரு காரணமாக கூட ஸ்கால்ப்பில் பொடுகு வரக்கூடும். ஆகவே எப்போது கூந்தலை கூத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நிறமூட்டல்

சருமத்தில் ஆங்காங்கு புள்ளிகள் போன்று காணப்படுகிறதா? அப்படியெனில் உடலில் புரோட்டீன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

ஆகவே இந்த குறைபாட்டினால், சருமத்தில் உள்ள நிறமிகள் ஆங்காங்கு தங்கி, புள்ளிகள் போன்று காணப்படுகின்றன.

அதிலும் இந்த பிரச்சனை கர்பபமாக இருக்கும் போது ஏற்பட்டால், அது பிரசவத்திற்கு பின் உண்ணும் வைட்டமின் உணவால் சரியாகிவிடும். மேலும் அவை மசாஜ் செய்தால், முற்றிலும் போய்விடும்.

கரும்புள்ளிகள் - வெள்ளை புள்ளிகள்

சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதால் தான் வெள்ளை மற்றும் கரும்புள்ளிகள் ஏற்படுகின்றன.

முக்கியமாக மூக்கு, உதட்டிற்கு கீழ் மற்றும் தாடை போன்ற இடங்களில் தான் வரும். இந்த பிரச்சனை நீங்குவதற்கு குறைந்த ஃபேட்டி ஆசிட் உள்ள உணவுகளை சாப்பிடுவது, வாரத்திற்கு ஒரு முறை ஆவி பிடிப்பது போன்றவற்றால் சரியாகிவிடும்.

மேலும் இந்த பிரச்சனையை அழகு நிலையங்களுக்குச் சென்றால், அதற்காக உள்ள சிறப்பு சிகிச்சையின் மூலம் சரிசெய்யலாம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top