புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்தியாவில்-உத்தர பிரதேச மாநிலத்தில், ஓடும் லாரியில் ஓட்டுனரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை தடுக்க முயன்று கீழே குதித்த தாய் மற்றும் அவரது மகள் ஆகியோர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர்.


உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் ராகேஷ். இவர தனது மனைவி ராஜகுமாரி (30), மகன் தீபக் (6), மகள் மீனா (3) ஆகியோருடன் நேற்றிரவு லக்னோ செல்லும் லாரியில் பயணம் செய்தார்.லக்னோவை நெருங்க 120 கி.மீட்டர் தூரம் இருந்த நிலையில் சிட்டவுரா சுங்கச்சாவடி அருகே உணவுக்காக லாரியை டிரைவர் நிறுத்தினார்.

மனைவி மற்றும் குழந்தைகளை லாரியில் அமர்ந்திருக்கும்படி கூறிய ராகேஷ் உணவு வாங்கி வருவதற்காக சென்றார்.அவர் சாலையை கடந்து சென்றதும் லாரியை கிளப்பிய ஓட்டுனர், கண்ணிமைக்கும் நேரத்தில் லக்னோ செல்லும் சாலையில் லாரியை வேகமாக ஓட்டினார்.

தனியாக இருந்த ராஜகுமாரியிடம் ஓட்டுனர் தவறாக நடந்துக்கொள்ள முயற்சித்தார். அவரது பிடியில் இருந்து தப்புவதற்காக தீபக் மற்றும் மீனாவை ஓடும் லாரியில் இருந்து கீழே தள்ளிவிட்ட ராஜகுமாரி தானும் கீழே குதித்தார்.

அப்போது லாரியின் பின் சக்கரம் ஏறி ராஜகுமாரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.3 வயது சிறுமி மீனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிறுவன் தீபக் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தப்பிச் சென்ற லாரி ஓட்டுனரை கைது செய்ய போலீசார் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.
 
Top