புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஆந்திர மாநிலம் கரீம் நகர் மாவட்டம் சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ். இவருக்கு சொந்தமான செல்போன் திருட்டு போய் விட்டது.
தனது வீட்டு அருகே குடிசை பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் மாருதி (14), சுரேஷ் (13), சபீர் (15) ஆகிய 3 பேர்தான் செல்போனை திருடியிருக்க வேண்டும்
என்று சந்தேகப்பட்டார்.
அவர்களிடம் விசாரித்ததில் 3 பேரும் நாங்கள் திருடவில்லை என்று கூறினார்கள். ஆனாலும் நரேஷ் சமாதானமாகவில்லை. கிராம பஞ்சாயத்தை கூட்டி பஞ்சாயத்தார் முன்பு 3 சிறுவர்களையும் நிறுத்தினார். பஞ்சாயத்தாரிடமும் 3 சிறுவர்கள் செல்போனை நாங்கள் திருடவில்லைன்று சத்தியம் செய்தனர். அதனை பஞ்சாயத்தார் கேட்கவில்லை.

பஞ்சாயத்தில் அடுப்பு மூட்டி பாத்திரத்தில் எண்ணையை ஊற்றி கொதிக்க வைத்தனர். சிறுவர்களை பார்த்து இந்த எண்ணைக்குள் கையை விடுங்கள். நீங்கள் திருடவில்லை என்றால் ஒன்றும் ஆகாது. திருடினால் கை பொங்கிவிடும் என்றனர்.

அப்பாவி சிறுவர்கள் 3 பேரும் ஏதும் அறியாமல் கொதிக்கும் எண்ணைக்குள் கையை விட்டனர். இதில் அவர்களது கை வெந்தது. உடனே பஞ்சாயத்தார் செல்போனை திருடியது நீங்கள்தான் எனக் கூறி அவர்களை அடித்து சித்ரவதை செய்தனர்.

இதனால் அப்பகுதி மக்கள் ஆவேசம் அடைந்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வந்ததும் பஞ்சாயத்தார் தப்பி ஓடி விட்டனர். சிறுவர்களை சித்ரவதை செய்த அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
 
Top