புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அமெரிக்காவின் மிசவுரி நகரில் வசிக்கும் எரிக்கா நிக்ரெல்லி(32) என்பவர் அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இவரது கணவர் நாத்தனும் அதே பள்ளியில்
ஆசிரியராக உள்ளார். 9 மாத கர்ப்பிணியாக இருந்த எரிக்கா கடந்த பெப்ரவரி மாதம் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபொழுது தன்னிலை இழந்து மயங்கி விழுந்தார்.

கண்கள் இரண்டும் மேல் நோக்கி நிலைகுத்தியபடி, வாயில் இருந்து நுரை தள்ளிய நிலையில் இருந்த எரிக்காவை அவரது கணவரும் சக ஆசிரியைகளும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையை சென்றடைவதற்குள் எரிக்காவின் நாடித்துடிப்பும், இதயத்துடிப்பும் முற்றிலுமாக அடங்கிப்போய் விட்டது. அவர் இறந்துவிட்டதாக அறிவித்த டொக்டர்கள் வயிற்றில் இருந்த குழந்தையை மட்டும் அவசர அவசரமாக அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்தனர்.

இது, ஏறக்குறைய பிணத்துக்கு பிரசவம் பார்த்த கதை போன்றது தான் என்றாலும், அதிர்ட்வசமாக குழந்தையின் நாடி மற்றும் இதயத்துடிப்பு நன்றாகவே இருந்தது.

குழந்தையை வெளியே எடுத்த பின்னர் எரிக்காவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்த டொக்டர்கள், அவரது இதயம் துடிப்பதை அறிந்து திகைத்து போனார்கள். இதனையடுத்து அவருக்கு ஆக்சிஜன் செலுத்தி இயல்பு நிலைக்கு வரவழைத்தனர்.

இந்த அரிய சம்பவம் தொடர்பாக கருத்து கூறிய டொக்டர்கள் "பத்தில் ஒன்பது பேர், முதல் கட்ட மாரடைப்பில் உயிரிழந்து விடுவார்கள். அபூர்வமாக எரிக்கா போல் சிலர் உயிர் பிழைக்கவும் வாய்ப்புள்ளது" என்றனர்






 
Top