புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நடிகை நதியா கூறியதாவது: இப்போதுள்ள இளைய தலைமுறை நடிகர்கள் நட்புடன் பழகுகிறார்கள். நிறைய விஷயங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். இதை ஷூட்டிங் தளத்தில் நான் காண்கிறேன். இதுவொரு நல்ல சூழல்.
ஆனால் முன்பு இந்தநிலை இருந்ததில்லை. ஹீரோயினை மையமாக வைத்து கதைகள் வந்தாலும் பெரும்பாலான கதைகள் ஹீரோயிசம் கொண்டதாகவே அமைக்கப்படுகிறது. 40களில் மூத்த நடிகைகளை மனதில் வைத்து கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. இப்போது அந்த நிலை இல்லை. திறமையான மூத்த நடிகைகள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களை யாரும் எண்ணிப்பார்ப்பதில்லை. அம்மா வேடத்துக்கு நடிகை தேவைப்பட்டால் இளம் நடிகைகளை தேர்வு செய்து அவர்களது தலைக்கு வெள்ளை டை அடித்து நடிக்க வைக்கிறார்கள். மூத்த நடிகைகளை இதுபோன்ற கதா பாத்திரங்களுக்கு தேர்வு செய்தால் அவர்களின் அனுபவம் அந்த கதாபாத்திரத்தை மெருகேற்றும் என்பதை ஏன் மறந்துவிடுகிறார்களோ தெரியவில்லை. ஹீரோக்கள் ஆதிக்கம் உள்ள இத்துறையில் ஒரேமாதிரியான படங்கள் வருவதில் மாற்றம் ஏற்பட இன்னும் நிறைய காலம் பிடிக்கும். இவ்வாறு நதியா கூறினார்.
 
Top