அம்பன்பொல மற்றும் மதவாச்சி ஆகிய பிரதேசங்களில் புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் 11பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமாக அஜித் ரோஹன தெரிவித்தார்.
அம்பன்பொல, நெலும்பத்வெவ பிரதேசத்தில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நெலும்பத்வெவ, உஸ்வெவ காட்டுப் பகுதியில் சந்தேகநபர்கள் சிலர் புதையல் தோண்டுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.
இதேவேளை, மதவாச்சி, தல்கஹாவெவ பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மேலும் 7 சந்தேகநபர்களை மதவாச்சி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளர் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினர்.
0 கருத்து:
கருத்துரையிடுக