புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நெல்லை அருகே 14 வயது மாமன் மகளை கட்டாய திருமணம் செய்த போலீஸ்காரர், அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.நெல்லை அருகே உள்ள தேவர்குளம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் தர்மராஜ். அவரது மகன் மன்மதன். அவர் மணிமுத்தாறு ஸ்பெஷல் போலீஸ் பட்டாலியனில்
போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். மன்மதனின் மாமன் வெள்ளத்துரை தேவர்குளத்தில் வசித்து வருகிறார். வெள்ளத்துரையின் 14 வயது மகள் மேல இலந்தை குளம் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் வெள்ளத்துரை மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தனது மகளை தர்மராஜ் குடும்பத்தினர் ஒரு விழாவிற்காக நெல்லை டவுனுக்கு அழைத்து செல்வதாகக் கூறி அழைத்து சென்று தனக்கு தெரியாமல் கடத்தி பிப்ரவரி மாதம் 8ம் தேதி மன்மதனுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக தெரிவித்துள்ளார்.

அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்படி தேவர்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக மன்மதன், அவரது பெற்றோர் தர்மராஜ், செல்வி ஆகியோரை கைது செய்தனர். மன்மதனின தங்கை அபினா, மைத்துனர் விஜய், தம்பி மதுபாரத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் ஆங்காங்கே குழந்தை திருமணம் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் அரசுக்கு தகவல்கள் அனுப்பியுள்ளனர். சமூக நலத்துறையினர், போலீசார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் சில குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இந்நிலையில் சட்டத்தை செயல்படுத்த வேண்டிய போலீஸ்காரரே மைனரை மாணவியை திருமணம் செய்ததாக கைது செய்யப்பட்ட சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top