புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில், பெற்றோரை வெட்டிக் கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், ரேணிகுண்டா அருகே கரம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பராமைய்யா, 65, கங்குலம்மாள், 60. இவர்களுக்கு மூன்று மகன்கள், நான்கு மகள்கள் உள்ளனர். மூத்த மகன் முருகன், 35. இவரைத்தவிர மற்றவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.

முருகன் மட்டும் பெற்றோருடன் வசித்து வந்தார். உடன் பிறந்தவர்கள் அனைவருக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைத்த நிலையில், தனக்கு மட்டும் திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரம் அடைந்தவர், நேற்றுமுன்தினம் பட்டப்பகலில் வீட்டில் இருந்த பெற்றோரை, கத்தியால் வெட்டிக் கொலை செய்து விட்டு தலைமறைவாகிவிட்டார்.

ரேணிகுண்டா போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான முருகனை தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top