புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியரின் மூத்த மகள் வனிதா. இவருக்கும் நடிகர் ஆகாஷ்க்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஆகாஷ்க்கும், வனிதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனையடுத்து ஆனந்த்ராஜ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகை வனிதா. இவர்களுக்கும் ஒரு மகள் உண்டு.

இந்நிலையில் கடந்த சில, பல மாதங்களுக்கு முன்னர் மகன் ஸ்ரீஹரியை வளர்ப்பது தொடர்பாக முதல் கணவர் ஆகாஷ்க்கும், வனிதாவுக்கும் இடையே பிரச்னை உருவானது. இதற்கு விஜயகுமாரின் தூண்டுதலும் காரணம் என்று குற்றம் சாட்டினார் வனிதா. இதுதொடர்பாக அப்பா, மகள், முதல்கணவர் ஆகாஷ் ஆகிய மூன்று பேரும் ரோட்டில் சண்டை போட்டது முதல் கோர்ட் படியேறியது வரை அனைவருக்கும் தெரிந்தது தான். பின்னர் மகனுக்காக தனது மனசை மாற்றிக்கொண்டு, இரண்டாவது கணவர் ஆனந்த்ராஜை பிரிந்து, முதல் கணவர் ஆகாஷ் உடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார் வனிதா. தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். இதுதவிர டி.வி. நிகழ்ச்சியிலும் பங்கேற்று நடித்து வருகிறார். 

மகன் பிரச்னை ஓய்ந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கும் வனிதாவிற்கு இப்போது மகள் மூலம் பிரச்னை தொடங்கி இருக்கிறது. தனது 2வது கணவர் ஆனந்த்ராஜ், சேத்துப்பட்டில் உள்ள தனது வீட்டில் நள்ளிரவில் புகுந்து, தன்னுடைய கடைசி மகள் ஜெயினிதாவை கடத்தி சென்று விட்டதாக சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் வனிதா. இதுகுறித்து வனிதா மற்றும் ஆனந்த்ராஜ் ஆகிய இருவரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

இதனிடையே ஆனந்த்ராஜ், ஆகாஷ் தான் தனக்கு போன் பண்ணி தனது மகளை வனிதா சரியாக வளர்ப்பதில்லை என்று கூறியதாகவும், அதனால் தான் நான் எனது மகளை தூக்கி ‌சென்றேன் என்று கூறியுள்ளார். மேலும் வனிதா த‌ன்னுடன் சேர்ந்து வாழ்ந்த போது சுமார் ரூ.2 கோடி அளவுக்கு தன்னுடைய பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றியதுடன், இப்போது தன்னையும் அடித்து துரத்தி விட்டதாக வனிதா மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top