மிட்டியகொட, பெம்கம பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர், அவரது கள்ளக்காதலனின் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.நேற்று இரவு இடம்பெற்ற இந்த
சம்பவத்தில் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த தீஷானி பிரியம்வதா என்ற 35 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த தீஷானி பிரியம்வதா என்ற 35 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
குடும்பப் பிரச்சினையொன்றின் காரணமாக மேற்படி பெண் மீது கத்திக் குத்தை மேற்கொண்ட சந்தேகநபர், அப்பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேற்படி கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்று பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.
0 கருத்து:
கருத்துரையிடுக