புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இறந்து விட்டதாக கருதி கல்லறையில் புதைக்க இருந்த நபர், கடைசி நேரத்தில் உயிருடன் இருப்பது தெரியவந்ததால் இறுதி சடங்குகள் ரத்து
செய்யப்பட்டன.எகிப்து நாட்டின் லக்சர் பகுதியை சேர்ந்தவர் அல் நுப்தி, 28. இவருக்கு சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மூர்ச்சையானார். பல மணி
நேரம் கழித்தும் இவர் எழுந்திருக்காததால், இவர் இறந்து விட்டதாக கருதி உறவினர்கள் அனைவரும் இவரை கல்லறைக்கு எடுத்து சென்றனர்.

முன்னதாக, இவரது உடலை குளிப்பாட்டியபோது இவர் எழுந்திருக்காததால், இறப்பு சான்றிதழ் பெறுவதற்காக மருத்துவரை அழைத்து வந்தனர். இறப்பு சான்றிதழ் கொடுக்க வந்த பெண் மருத்துவர், அல் நுப்தியின் உடலை தொட்டு பார்த்த போது, அவரது உடல் கதகதப்புடன் இருப்பது தெரிய வந்தது.

சிறிது நேரத்தில், அல் நுப்தி உயிருடன் எழுந்தார். துக்கத்தில் மூழ்கியிருந்த உறவினர்கள், அல் நுப்தி உயிரோடு எழுந்தது குறித்து மகிழ்ந்து, இறுதி சடங்கை விழாவாக மாற்றி கொண்டாடினர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top