புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலடைந்த வீட்டுத் தோட்ட மரமொன்றில் கழுத்தில் சுருக்கிட்டு குடும்பஸ்தல் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.கள்ளக் காதலியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இவர் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று விசாரணைகளில்
தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த ஜே.கே.தேவராஜ் விஜேகுமார் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவராவார்.இன்று புதன்கிழமை காலை 7.40 மணியளவில் இவரது சடலம் குறித்த தோட்ட மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த நிலையில் வத்தளை பொலிஸாரால் மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top