பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் மனைவி ஜானகி அம்மாள் தனது 73ஆவது வயதில் சென்னையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை காலமாகியுள்ளார்.சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், வீட்டிலிருந்தவாறே சிகிச்சைப் பெற்றுவந்துள்ளார். இந்நிலையில், கடந்த
3 நாட்களுக்கு முன்பு அவருடைய உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதை அடுத்து, சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டார்.
3 நாட்களுக்கு முன்பு அவருடைய உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதை அடுத்து, சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவருக்கான சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் அவர், மரணமடைந்தார். அவரது இறுதிக் கிரியைகள் இன்று காலை இடம்பெற்றுள்ளன.
ஜானகி அம்மாளின் உடலுக்கு தமிழ் திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தினர். மரணமடைந்த ஜானகி அம்மாளுக்கு, கோபி, முரளி, பிரகாஷ், அரிதாஸ் ஆகிய 4 மகன்களும், லதா, மது, சாந்தி ஆகிய 3 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக