யாழ்.குடாநாட்டில் இரு சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்டுத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.எம்.ஜிப்ரி தெரிவித்துள்ளார்.
இச் சம்பவமானது மானிப்பாய் பொலிஸ் பிரிவில் 15 வயதுடைய சிறுமியை கடத்தி அச்சிறுமியை நயினாதீவு பகுதியில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளமை தொடர்பாக 21 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இளவாலைப் பகுதியில் 14 வயது நிரம்பிய சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள இளைஞனை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக யாழ்.சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.எம்.ஜிப்ரி மேலும் தெரிவித்துள்ளார்
0 கருத்து:
கருத்துரையிடுக