புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


 டிசம்பர் மாதம் 21ம் திகதி மாயன் நாட்காட்டி முடிவிற்கு வருகிறது உலகம் அழியப்போகிறது என்பதோடு ஆரம்பத்து பல பல புனைகதைகளிற்கு கை, கால் வைத்து மக்களிடைய பீதியை ஏற்படுத்தும் முயற்சி அமெரிக்காவை
உத்தியோகபூர்வமாக அறிக்கை விட வைத்திருக்கிறது.

அமைதியாய் இருங்கள்… உலகில் எந்த மாற்றமுமே டிசம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறப்போவதில்லை. மாயன் நாட்காட்டியில் கூட ஒரு ஆண்டுக்கான சுற்று டிசம்பர் 21ம் திகதி முடிந்து புதிய ஆண்டு டிசம்பர் 22ம் திகதி தொடங்குகிறதே தவிர அந்த நாட்காட்டியின் ஊழிக்காலம் முடியவில்லை எனத் தெரவிக்கப்பட்டுள்ளது.

இப்படியான வதந்திகளை கடந்த காலங்களிலும் பல வேறு விதமாக வந்திருக்கின்றன. உலகம் அழியப்போகிறது என்ற வதந்தி 2003ம் ஆண்டு, 2004ம் ஆண்டில் கூட வந்திருக்கின்றன எனத் தெரிவித்துள்ளதோடு,

எந்த ஒரு அழிவோ மாற்றமோ டிசம்பர் 21ம் திகதி இடம்பெறப்போவதில்லை. அது மற்றைய நாட்களைப் போல சாதாரண நாட்களே எனத் தெரிவித்துள்ளது. கிரகங்கள் பூமியை நோக்கி வருகின்றன. எரிகற்கள் விழப்போகின்றன என்பதெல்லாம் கட்டுக்கதை.

எங்களிலும் பலர் இந்தக் கதைகளை நம்பி, இனி எதற்குப் பணம் பொருள் என்று கடணட்டையிலும், வங்கிக்கடனிலிமிருந்து பணம்; பெற்று வீணாய் செலவழித்தால் டிசம்பர் 22ம் திகதியிலிருந்து அவற்றைக் திருப்பிச் செலுத்துவதற்குரிய வழியையும் தயார் படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் டிசம்பர் 21ம் திகதியில் உலகில் ஒன்றுமே மாறப்போவதில்லை.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top