தென்பகுதி அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் சட்டத்தரணி ஒருவர் மரணமடைந்துள்ளார்.இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் மரணமானவர் காலி, எலியட் வீதியில் வசிக்கும் காமினி டேவிட்(69) என்ற சட்டத்தரணியாவார்.
இச்சம்பவத்தின் போது சட்டத்தரணி பயணித்த கெப் வாகனத்தில் ஒரு பகுதி உடைந்து சிதறியுள்ளதுடன் மிகுதிப் பாகம் மறுபுறமாகப் புரண்டுள்ளது.
பாதையின் பாதுகாப்பு வேலியும் சேதமடைந்து உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த வாகன சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடும் வேகமே இந்த விபத்து ஏற்படக் காரணமென தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக