புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இங்கிலாந்தில் அல் குரான் அத்தியாயம் ஒன்றை மனப்பாடம் செய்யாத மகனை அடித்துக் கொலை செய்துள்ளார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர்.

இந்த சம்பவம் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தியாவை சேர்ந்த யூசுப் இங்கிலாந்தில் கார்டிப் என்ற இடத்தில் தனது மனைவி சாராவுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை கற்கச் சொல்லியும், அத்தியாயங்களை மனப்பாடம் செய்யச் சொல்லியும் தனது மகன் யாசினை அடிக்கடி சாரா அடிப்பாராம்.

இருந்தாலும் யாசினால் குரான் அத்தியாயங்களை மனப்பாடம் செய்ய முடியவில்லை. இதனால் யாசின் மீது கோபமடைந்த சாரா கடந்த 2010ம் ஆண்டு மிருகத்தனமாக அடித்திருக்கிறார். இதில் சிறுவன் யாசின் இறந்து போயிருக்கிறான். எனினும் அதைப்பற்றி கவலைப்படாத சாரா, யாசின் உடலை மறைக்க எண்ணை ஊற்றி எரித்து, கருகிய உடலை குழிதோண்டி புதைத்திருக்கிறார்.

இந்த செய்தி காவல் துறையினருக்கு தெரியவர சாரா மீது கார்டிப் கிரௌன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆரம்பக் கட்ட விசாரணையின்போது, தனது மகன் சாவுக்கு தான் காரணம் இல்லை என சாரா மறுத்து வந்தார்.

அதேநேரம் தனது கணவன் யூசூப்தான் காரணம் என்றும் கூறினார். இந்நிலையில், சாரா தனது மகனை அடித்துக் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார்.

குரானை மனப்பாடம் செய்ய முடியாத காரணத்திற்காக பெற்ற மகனையே அடித்து கொலை செய்த சம்பவம் இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top