வான் பரப்பில் பாரிய வெளிச்சத்தைப் பார்வையிட்ட ஆறு சிறுவர்ளக் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அறியப்படுகிறது. வானத்தில் பாரியவெளிச்சமொன்றை பார்த்த மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். வெலிகம நதுகம, வித்தியாலயத்தைச் சேர்ந்த ஆறு
மாணவர்களே மேற்படி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் முற்பகல் 10.30 அளவில் குறித்த வெளிச்சத்தை மாணவர்கள் பார்வையிட்டுள்ளனர். இந்த வெளிச்சத்தைப் பார்வையிட்ட ஆறு மாணவர்களுக்கும், பாரிய பாதிப்புக்கள் ஏற்படவில்லை எனவும், சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெளிச்சம் எவ்வாறு ஏற்பட்டது என்பது பற்றிய தகவல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.
0 கருத்து:
கருத்துரையிடுக