குரங்குகளுக்கு வித்தைகள் காட்டுவதற்கு பயிற்சியளிப்பதில் முன்னணி பயிற்சியாளர்களில் ஒருவராக விளங்கும் தனது கணவரிடம் பயிற்சி பெறும் குரங்குகளுக்கு மனைவியொருவர் தாய்ப்பாலூட்டிவரும் விசித்திர சம்பவம் சீனாவின் ஹெனான் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.
நன்-யாங் நகரைச் சேர்ந்து ஜியவோ சின்சென் (27) என்ற பெண்ணே தனது கணவரான ஹுவான் அயிகிங் (34) என்பவரால் நடத்தப்படும் குரங்குகளுக்கான பயிற்சிப் பாடசாலையிலுள்ள குரங்குகளுக்கு தாய்ப்பால் ஊட்டி வருகிறார்.
ஹுவான் அயிகிங்கின் குரங்குகளுக்கான பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெறும் குரங்குகள் திரைப்படங்கள், நாடகங்கள் மற்றும் சாகச நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் ஜியவோ சின்சென் தெரிவிக்கையில், புதிதாகப் பிறந்த குரங்குக் குட்டிகள் இரவு வேளையில் தாப்பால் குடிப்பதற்காக தனது படுக்கையறைக்குள் பிரவேசிப்பது வழமையாக உள்ளதாகக் கூறினார்.
'நான் அக்குட்டிகளை எனது பிள்ளைகளாகவே பார்க்கிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தம்பதி தமது மகனான ரியு உடன் விளையாடுவதற்காக குரங்குகளில் ஒன்றை தமது இரண்டாவது பிள்ளையாகத் தத்தெடுத்து வீட்டில் வளர்த்து வருகின்றனர்.
மேற்படி குரங்கு தமது மகனுக்கான சிறந்த விளையாட்டுத் தோழனாக விளங்குவதாக ஹுவான் கூறினார்.
0 கருத்து:
கருத்துரையிடுக