அவுஸ்திரேலியாவில் உள்ள டுகாங்க் பே என்ற இடத்தில் முதலையிடம் சிக்கிய 23 வயது இளம் பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள டுகாங்க் பே என்ற சுற்றுலாத் தளத்திற்குச் செல்லும் சொகுசுக் கப்பலில் தாரா ஹாக்ஸ் என்ற பெண் பணியாளராக பணியாற்றி வருகிறார்.
23 வயதான அவர் அங்குள்ள குளம் ஒன்றில் நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு முதலை, படு வேகமாக தாராவின் காலைக் கவ்விக் கொண்டது.
தாராவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது நண்பர் ஆலன், முதலையின் வாயைப் பிடித்து பிரிக்க முயற்சித்தார். இதையடுத்து முதலையின் கண்களில் சரமாரியாக அவர் குத்தினார்.
இதில் முதலை நிலை குலைந்து வாயைத் திறந்து பின்வாங்கிய முதலை வேகமாக தண்ணீருக்குள் ஓடி விட்டது.
உடனடியாக சொகுசுக் கப்பலில் இருந்த ஹெலிகாப்டர் மூலம் தாராவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார்.
அவரது கால் அதிர்ஷ்டவசமாக பெரும் காயமின்றித் தப்பியது. இருப்பினும் காலில் பல இடங்களில் முதலையின் பல் பட்டதால் காயம் ஏற்பட்டுள்ளது.
தொடைப் பகுதியில் தான் காயம் அதிகமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக