கனடாவில் துருவப்பனிகள் உருகி கொண்டிருப்பதால் கடல்மட்டம் உயர்ந்து, கடற்கரை பகுதிகள் ஆபத்தை சந்திக்கின்றன என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
பிரிட்டனில் உள்ள லீட்ஸ் பல்கலைகழகத்தின் புவி ஆராய்ச்சி துறையின் பேராசிரியர் ஆண்டுரூ ஷெப்பர்ட் கூறுகையில், கீரின்லாந்து மற்றும் அண்டார்டிக் பகுதிகளில் உறைபனிகள் மிக வேகத்துடன் உருகி கொண்டிருக்கின்றன. இது குறித்து புதிய ஆராய்ச்சி ஒன்று நடந்து வருகின்றது.
இக்குழுவில் 26 ஆய்வு நிலையங்களை சேர்ந்த 47 தட்பவெப்ப அறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.
இக்குழுவின் கனடாவின் ஒட்டாவாவில் உள்ள புவி அமைப்பின் இயற்பியல் விஞ்ஞானி கிளென் மில்னே இடம்பெற்றுள்ளார்.
மேலும் கனடாவின் RADARSAT-1 உட்பட பத்து விண்கலங்களின் தகவல்கள் கடந்த 20 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இவற்றை கொண்டு உருகிவரும் பனியின் அளவையும், அதனால் பெருகிவரும் கடல்நீரையும் ஆராய்ந்து வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக