சமீபத்தில் கனடா நாட்டில் நடந்த கொலை ஒன்று, தமிழர்களின் சம்பிரதாய கல்யாணங்களை கேள்விக்குறியாக்கியுள்ளது. 21 வயதான அனுஜா வின் வாழ்க்கைஅவரைச் சுழவுள்ள உறவினர்களால் சீரழிக்கப்பட்டுள்ளதா என்ற
விவாதங்களும் நீதிமன்றில் எழுந்துள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனால், பேசிக் கலியாணம் செய்வது என்று சொல்லுவார்கள். ஒருவரை ஒருவருக்குத் தெரியாமல், இடைத் தரகர் ஒருவர் ஊடாகப் பேசி, பின்னர் மாப்பிளையும் பெண்னும் ஒருவரை ஒருவர் மணந்துகொள்வார்கள். அதிலும் பெரும்பாலான பெண்கள், கல்யான வீட்டில் வைத்து தான் மாப்பிள்ளையோடு பேசவே ஆரம்பித்திருப்பார்கள் ! இவ்வாறு தான் அனுஜாவின் வாழ்க்கையும், கேள்விக்குறியாகி இறுதியில் கட்டிலில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளது. நடந்தது என்ன ?
அனுஜா 2011ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் சிவலோக நாதன் என்பவரை மணம் முடித்துள்ளார். அப்போது அனுஜாவுக்கு 21 வயதும் சிவலோக நாதனுக்கு 27 வயதுமாக இருந்தது. பெண் வீட்டார் சுமார் 50,000 ஆயிரம் கனேடிய டாலர்களை செலவு செய்து இத் திருமணத்தை நடத்தி வைத்தனர். இதற்கு முன்னதாக அனுஜாவுக்கு இந்த சிவலோக நாதன் யார் என்றே தெரியாது. திருமணமாகி முதல் மாதத்திலேயே வீட்டி வாடகை கட்டவில்லை என்ற காரணத்தால், வீட்டை இழந்த சிவலோகநாதன், அனுஜாவின் பெற்றோர் வீட்டின் கீள் பகுதியில் குடிபுகுந்துள்ளார்கள். அடிக்கடி கோபப்படும் சிவலோகநாதன், அனுஜாவை பார்த்துப் பாராமல் அடிப்பது வழக்கம். கன்னத்தில், தலையில் , மற்றும் முதுகுப் பகுதியில், இவர் அனுஜாவைத் தாக்கியுள்ளார். ஒரு சமயம் பாக்சிங் அடிப்பது போல அனுஜாவின் முகத்தில் கைகளால் குத்தி காயப்படுத்தியுள்ளார். நிலத்தில் வீழ்ந்த அனுஜாவின் தலைமுடியை பிடித்து அவரை தூக்கி மீண்டும் தாக்கியுள்ளார். இதனால் பொலிசார் இப் பிரச்சனையில் தலையிடவேண்டி வந்தது.
சுமார் 3 தடவை பொலிசார் சிவலோகநாதனைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளார்கள். ஆனால் அவர் திருந்தியபாடாக இல்லை. ஒவ்வொரு முறையும் பொலிசார் சிறையில் அடைக்கும்போது, கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று அயலவர்கள் அட்வைஸ் பண்ணுவார்களாம். இதனால் மனமிரங்கிய அனுஜா, தானே சென்று அவர்மேல் உள்ள குற்றங்களை எல்லாம், நிராகரித்து அவரை பலதடவை சிறையில் இருந்து விடுவித்துள்ளார். இருப்பினும் அவர் இறுதியாகக் கைதுசெய்யப்பட்டவேளை, அவர் பிணையில் செல்ல நீதிபதி அனுமதிக்கவில்லை. இதேவேளை அவர் மீது தாம் எந்தக் குற்றத்தையும் சுமத்த விரும்பவில்லை என்று அனுஜா தெரிவித்துள்ளார். இருப்பினும் சில குற்றங்களுக்கு, பாதிக்கப்பட்ட நபர் மறுத்தால் கூட குற்றவாளியை நீதிமன்றில் நிறுத்தி தண்டனை வாங்கிக்கொடுக்க முடியும். இவ்வாறு ஒரு நடவடிக்கையை எடுக்கவே கனேடியப் பொலிசார் விரும்பியுள்ளார்கள். இதனை அனுஜா ஆட்சேபித்தும் உள்ளார். இந் நிலையில் சில தினங்களுக்கு முன்னர், பெற்றோர் வீட்டின் கீள்ப் பகுதியில், கழுத்து வெட்டப்பட்ட நிலையில் அவர் சடலமாக காணப்பட்டுள்ளார்.
பிணையில் வெளியே வந்த, கணவர் சிவலோக நாதன் அனுஜாவை கொலைசெய்துள்ளார். கழுத்தை வெட்ட பாவிக்கப்பட்ட கத்தி முதல் அனைத்து தடையங்களையும் கண்டுபிடித்துள்ளார்கள் பொலிசார். சிவலோகநாதனே இக் கொலையைச் செய்துள்ளார் என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள். 28 வயதாகும் இச் சந்தேக நபர் தற்போது எல்லாத் திருமணங்களும் இவ்வாறு முடிவதில்லை ! ஆனால் திருமணம் என்று வரும்போது தமக்கு பிடித்த, அல்லது நன்கு தெரிந்த ஒருவரை எமது பிள்ளைகளுக்கு மணம் முடித்து வைப்பது நல்லதல்லவா ? யார் என்றே தெரியாத நபர் ஒருவரை திடீரென்று எவ்வாறு மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்கிறீர்கள் ? முன் பின் தெரியாத நபர் ஒருவரை நம்பி 21 வருடம் அன்பாக வளர்த்த பெண் பிள்ளையை எவ்வாறு அனுப்பிவைக்கிறீர்கள். அனுஜாவுக்கு நடந்த கொடுமை இனியும் ஈழத் தமிழர் மத்தியில் தொடரக்கூடாது. தமிழ் பெற்றோர்கள் இதனை ஒரு முன்னுதாரணமாக எடுப்பது நல்லதல்லவா ?
0 கருத்து:
கருத்துரையிடுக