சீனாவில் 23 கதிரைகளை பற்களால் தூக்கி சாதனை-புகைப்படம்
சீனாவைச் சேர்ந்த நபரொருவர் பலகையிலான 23 கதிரைகளை தனது பற்களால் தூக்கி வைத்திருந்து புதிய சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார்.
லீ ஹோங்க்சியோ ஏனும் 30 வயதான நபர், சீனாவின் சோங்கிங் நகரில் இச்சாதனையை நிகழ்த்தினார். அவர் 23 கதிரைகளையும் தனது பற்களின் மூலம் 11 விநாடிகள் தூக்கி வைத்திருந்தார். மேற்படி நீண்ட கதிரைகளின் மொத்த நிறை 70 கிலோகிராம்களாகும்.
இதற்குமுன் 14 கதிரைகளை தூக்கி வைத்திருந்தமையே சாதனையாக இருந்தது.
சீனாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஜின்ஸி உலக சாதனைப் பதிவு அலுவலகமானது புதிய சாதனைக்கான சான்றிதழை லீ ஹோங்சியோவுக்கு வழங்கியுள்ளது