தங்கையை நினைத்து பட படக்கும் நடிகை கார்த்திகா
மாஜி நடிகை ராதாவின் மகள், கார்த்திகா, ஏற்கனவே, திரையுலகில் கால் பதித்து விட்டார். இவரைத் தொடர்ந்து, ராதாவின் இளைய மகள், துளசியும், மணிரத்னத்தின், கடல் படத்தின் மூலம்,
தமிழுக்கு அடி எடுத்து வைத்துள்ளார்.
இந்த படத்தின் படப் பிடிப்பு முடிந்துள்ளதால், "யான் என்ற படத்திலும், துளசி, தற்போது நடித்து வருகிறார். தங்கையைப் பற்றி பேசும்போதெல்லாம், கார்த்திகாவின் முகத்தில், சந்தோஷக்களை தாண்டவமாடுகிறது. "கடல் படத்தின் ரிலீசை, துளசியை விட, நான் தான், அதிகம் எதிர்பார்த்துள்ளேன்.
துளசியின் முதல் படம், வெளியாவதை நினைத்தால், பட படப்பாக இருக்கிறது. ஒட்டு மொத்த குடும்பமும், துளசியை, திரையில் பார்க்க, ஆவலாக உள்ளோம் என்ற கார்த்திகா, "எங்க அம்மா, நடிகையாக இருந்தாலும், எங்களை சினிமா வெளிச்சம் படாமல் தான், வளர்த்தார்.
சினிமாவில் நடிக்க வரும்வரை, திரையுலகத்தை பற்றி, எனக்கும், துளசிக்கும், அதிகமாக எதுவும் தெரியாது என்கிறார், அப்பாவியாக.