ஆத்யா அஞ்சும் வில்கின்சன் என்ற சிறுமி மூன்று வயதாக இருக்கும் போது, காணமால் போய்விட்டார்.
இதனையடுத்து ஆத்யாவை, அவரது தந்தை அழைத்து சென்றது தெரியவந்தது. பின் குழந்தையை பார்க்க வேண்டும் என தாய் கெஞ்சி கேட்டும், மறுத்து விட்டார்.
இதனால் கோபமடைந்த பெண், கணவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
உடனே இவருக்கு சிறைத்தண்டனை விதித்து, குழந்தை கண்டுபிடிக்கும்படி பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இச்சிறுமி பாகிஸ்தானில் வளர்வது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே பாகிஸ்தானிலிருந்து மென்செஸ்டருக்கு அழைத்து வரப்பட்ட சிறுமியை, தாய் கண்ணீர் மல்க வரவேற்றார்.
அவர் கூறுகையில், ஆத்யாவை கடந்த 2009ஆம் ஆண்டில் தான் பார்த்தேன். அதன் பின்பு மூன்றாண்டுகள் கழித்து பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார்.
கடந்த 2008ஆம் ஆண்டில் கணவன்- மனைவி இருவரும் விவாகரத்து செய்ததே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.