புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ரம்யா நம்பீசனும் இப்போது நல்லதொரு கவர்ச்சி நடிகையாக மாறியுள்ளார். குடும்பப் பாங்காக, நீக்குப் போக்கான கவர்ச்சியுடன் நடித்து வந்த அவர் தற்போது
கதகதப்பான கவர்ச்சிக்கு மாறியுள்ளாராம்.

மலையாளத்தில் நடித்து வந்தவர் ரம்யா நம்பீசன். பின்னர் அங்கிருந்து தமிழுக்கும் நடிக்க வந்தார். தமிழில் நடித்தாலும் மலையாளத்தில்தான் நிறைய நடித்துள்ளார் ரம்யா.

தமிழில் நுழைந்து பின்னர் அப்படியே தெலுங்குக்கும் பயணித்தவர் ரம்யா. ஆனால் தமிழைப் போல தெலுங்கில் இவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

சீதையாக வந்த ரம்யா

2008ம் ஆண்டு வெளியான ராமன் தேடிய சீதைதான் ரம்யா நடித்த முதல் தமிழ்ப் படம். அதில் அவரதுநடிப்புப் பேசப்பட்டது. அவரும் ஒரு நடிகையாக அங்கீகரிக்கப்பட்டார்.

ஆட்டநாயகன்

2010ம் ஆண்டு ஆட்டநாயகன் படத்தில் நடித்தார் ரம்யா நம்பீசன். அதிலும் அவருக்கு நல்ல பாத்திரம்தான். ஷக்தியுடன் இணைந்து நடித்த இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததால் ரம்யா ராசியில்லாத நடிகையாக மாறிப் போனார்.

கை கொடுத்த குள்ளநரிக்கூட்டம்

2011ல் வெளியான குள்ளநரிக் கூட்டம் ரம்யாவுக்கும் நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தது. ராசியில்லாத நடிகை என்ற அவப் பெயரைத் துடைக்கவும் உதவியது.

ம‌லையாளத்துக்கு போனார்

ஆனால் அதற்குப் பின்னர் அவருக்குப் பெரிய அளவில் தமிழி்ல படங்கள் வரவில்லை. இதனால் மீண்டும் தாயகமான மலையாளத்துக்கேத் திரும்பினார். அங்கு சீரியஸாக நடித்துக் கொண்டிருந்தவரை மீண்டும் தமிழ் அழைத்தது.

பீட்சாவில் பிரமாதம் பீ்ட்சா படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தார் ரம்யா. இப்படம் பேசப்பட்டது. ஹீரோவைப் போலவே ரம்யாவுக்கும் நல்ல பெயர் கிடைத்தது.

கையில் 3 படம் தற்போது ரம்யா கையில் 3 தமிழ்ப் படங்கள் உள்ளனவாம். முறியடி, ரெண்டாவது படம், சென்னையில் ஒரு நாள் என நடித்து வரும் ரம்யா முழு நீளக் கவர்ச்சிக்கும் தயார் என்று ஓலை அனுப்பி வருகிறாராம்.
 
Top