நடிகர் அஜீத்துடன் மோதும் ஆர்யா!
பெரும்பாலான ஹீரோக்களைப்போல், நான் படத்திற்கு படம் நல்லவனாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிக்காதவர் அஜித். ஒரு மாற்றத்துக்காக, மங்காத்தா மாதிரி நெகடிவ் ரோல்களிலும் துணிச்சலாக நடிப்பார். இப்போது அவரைப் போல், ஆர்யாவும் மாறியுள்ளார்.
விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துவரும் படத்தில்,
ஆர்யாவும், நெகடிவ் ரோலில் தான் நடிக்கிறார். தற்போது அஜீத் – ஆர்யா நேருக்குநேர் மோதிக் கொள்ளும் சண்டை காட்சி, சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது.
மேலும், படம் முழுக்க இருவரது கேரக்டர்களும், எதிரும் புதிருமாக சென்று கொண்டிருந்தாலும்,க்ளைமாக்சில் இருவரும் நண்பர்களாகி விடுவார்களாம்.