புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


செர்பியாவில் உள்ள கிராமமொன்றில் ரத்தக்காட்டேரி உலாவுவதாக கிளம்பியுள்ள வதந்தியால் அனைவரும் பாக்கெட்டில் வெள்ளை பூண்டை வைத்து கொண்டு சுற்றுகிறார்களாம்.மேற்கு செர்பியாவில் மலை
குன்றுகளுக்கும், அடர்ந்த காடுகளுக்கும் இடையே அமைந்துள்ள அழகிய கிராமம் ஜரோஜீ.


அந்த கிராமத்தில் ரத்தக்காட்டேரி ஒன்று உலாவி வருவதாக மக்கள் நம்புகின்றனர்.

இதையடுத்து ரத்தக்காட்டேரியிடம் இருந்து தப்பிக்க மக்கள் அனைவரும் தங்கள் பாக்கெட்டுகளில் வெள்ளைப் பூண்டும், அறைகளில் சிலுவையும் வைத்திருக்குமாறு உள்ளூர் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

செர்பியாவில் கூறப்படும் சவா சவானோவிக் என்னும் ரத்தகாட்டேரி வெறும் கட்டுக் கதை என்பது மக்களுக்கு தெரிந்தும் அதை நம்ப மறுக்கின்றனர்.

இந்நிலையில் ஓக் மர காடுகளுக்கு நடுவே இருந்த மில்லில் தானியங்களை அரைக்க வந்தவர்களின் ரத்தத்தை சவானோவிக் குடித்துவிட்டதாக மக்கள் நம்புகின்றனர்.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரத்தால் ஆன அந்த மில் இடிந்து விழுந்தது. இதனால் சவானோவிக் வேறு இடம் தேடி அலைவதாகவும், ரத்தக்காட்டேரி காடுகளில் நடக்கும் சத்தம் கேட்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top