புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நடிகர் கமல்ஹாசன் முதல் மனைவி வாணி கணபதியை விவாகரத்து செய்த பின்னர் நடிகை சரிகாவை திருமணம் செய்து கொண்டார். சுமார் 20 ஆண்டுகள் நீடித்த இவர்களது திருமணம் 2004ல் முறிந்தது. இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். சரிகா மும்பையில் செட்டிலாகிவிட்டார். இவர்களுக்கு ஸ்ருதிஹான், அக்ஷ்ராஹாசன் ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். மகள்கள் மட்டும் அவ்வப்போது சரிகாவை பார்த்துவிட்டு வருகின்றனர்.


 
இந்நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கும் சரிகா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கமல் உடன் மீண்டும் இணைவீர்களா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில் தங்களது குழந்தைகளுக்காக மீண்டும் கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ்வீர்களா என்பது குறித்த கேள்விக்கு, நடக்காத விஷயத்தை பற்றி ஏன் பேச வேண்டும். இதுதொடர்பாக நான் யாரையும் சந்தித்து பேச தயாரக இல்லை.

வாழ்க்கையை இருவிதமாக வாழலாம். ஒன்று எந்த வாழ்க்கைக்கு நாம் தள்ளப்பட்டமோ அந்த வாழ்க்கையை ஏற்று வாழ்வது. மற்றொன்று நம்முடைய அன்றாட வாழ்க்கை சந்தோஷமாக ரசித்து வாழ்க்கையை வாழ்வது. இதில் நான் இரண்டாவது ரகம். மேலும் இப்போது நான் வாழும் வாழ்க்கை ரொம்பவே நன்றாக இருக்கிறது. சந்தோஷமாக கவுரவமாக வாழ்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் மகள்களின் சினிமா மற்றும் காதல் விவகாரங்கள் பற்றிய கேள்விக்கு பதிலளித்த சரிகா, ஸ்ருதிக்கு இசையிலும், அக்ஷராவுக்கு நடனத்திலும் ஆர்வம். இருவருமே அவற்றைக் கற்றவர்கள். சினிமாவில் தங்களுக்கான இடத்தை இருவருமே பெறுவார்கள். காதல் விவகாரங்கள் பற்றி நான் தலையிடுவது இல்லை. அது அவர்களின் சொந்த வாழ்க்கை என்று கூறியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top