புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் விளாவெட்டுவான் கிராமத்தில் அமையப் பெற்று உள்ளது அருள் மிகு ஸ்ரீ நாக தம்பிரான் ஆலயம்.இங்கு கடந்த போயா தினத்தோடு அண்டி இடம்பெற்ற அதிசயம் ஒன்று அடியவர்களை புல்லரிக்க வைத்து உள்ளது.


இவ்வாலயத்தில் முத்துமாரி அம்மனுக்கென சன்னிதானம் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது.கடந்த போயா தினத்தன்று அம்மனின் சன்னிதியில் கும்பம் வைத்து பூசைகள் நடத்தப்பட்டன.

ஆயினும் அம்மனின் திருவுருவச் சிலையை பூசைகள், வழிபாடு முடிந்த பிற்பாடு பத்திரப்படுத்த நிர்வாகிகள் மறந்து விட்டனர்.



திருவுருவச் சிலையை சன்னிதானத்திலேயே விட்டு விட்டு சென்றனர்.

மறுநாள் இவ்விடயம் நினைவுக்கு வர கோவில் அர்ச்சகர் ஓடோடி வந்து பார்த்தார்.

அப்போது அம்மன் சிலைக்கு காவலாக நாக பாம்பு ஒன்று படம் எடுத்து நிற்கின்றமையை கண்டு கொண்டார்.

இது போன்ற ஏராளமான அற்புதங்கள் இவ்வாலயத்தில் அடிக்கடி இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top