புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மௌன்ட் பிரிட்ஜ் ஹோட்டலுக்கு பின்னாலுள்ள தண்டவாளத்துக்கு அருகிலிருந்து குழந்தை ஒன்று சடலம் மீட்கப்பட்டுள்ளது.


நேற்று பிற்பகல் 3 மணியளவில் மீட்கப்பட்ட இச்சடலமானது சுமார் 3 மாத குழந்தையொன்றின் சடலமென தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சடலமானது பிரேத பரிசோதனைக்காக களுபோவிலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்தார்.

குறித்த பகுதியில் குழந்தையின் சடலமொன்று கிடப்பதாக 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அச்சடலத்தினை மீட்டுள்ளனர்.

நேற்றைய தினம் அதிகாலை வேளையில் அல்லது பகல் வேளையில் இச்சடலத்தினை யாராவது அவ்விடத்தில் விட்டுச் சென்றிருக்கலாம் எனத் தெரிவிக்கும் கல்கிசைப் பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top