இதுவரையிலும் ஆங்கிலத்திலேயே பார்த்து வந்த டுவிட்டர் பக்கம் தற்போது தமிழில் வர இருக்கிறது.பெங்காலி, அரபி, பிரெஞ்ச் மற்றும் தமிழ் உட்பட மொத்தம் 16 மொழிகளில் தனது பக்கத்தினை வடிவமைக்க உள்ளது டுவிட்டர்.
உதாரணத்திற்கு கூகுளில் தமிழ் என்ற பட்டன் இருக்கும், அதனை கிளிக் செய்தால் குறித்த இணையப்பக்கம் முழுவதும் தமிழில் மாறி விடும்.
இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால், டுவிட்டர் பக்கத்தை தமிழில் வடிவமைக்கும் வாய்ப்பினை தனது பயனாளர்களுக்கே டுவிட்டர் வழங்குகிறது.
அதாவது https://translate.twitter.com/welcome என்ற தளத்திற்கு சென்றால் உங்களுக்கான வார்த்தை கொடுக்கப்பட்டிருக்கும்.
அதற்கு சரியான மொழிபெயர்பை டைப் செய்து சமர்பிக்க வேண்டும். Ex-- Welcome -- நல்வரவு
இப்படி பதிவு செய்யப்படும் வார்த்தைகளில் இருந்து, வாக்கெடுப்பின் மூலம் சிறந்த வார்த்தைகள் தெரிவு செய்யப்படும்.
0 கருத்து:
கருத்துரையிடுக