புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து காதலன் தூக்கில் தொங்கியதை அறிந்த காதலியும்(பள்ளி மாணவி) தூக்கில் தொங்கினார்.
தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம் ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்த மதிவாணன் என்பவரின் மகள் மாலதி (வயது 17), மேல்நிலை பள்ளி படித்து வந்தார்.


தினமும் அவர் பள்ளிக்கு பேருந்தில் செல்லும் போது அவருக்கும் சரத்குமாருக்கும் (வயது 19) காதல் ஏற்பட்டது.

சரத்குமார் பெரம்பலூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் படித்து வந்தார்.

இவர்களது காதல் இரு வீட்டாரின் பெற்றோருக்கும் தெரியவந்ததையடுத்து படிக்கும் காலத்தில் காதல் என்று அலையக்கூடாது என்று பெற்றோர் கண்டித்தனர். இதனால் மாலதியும், சரத்குமாரும் மனம் உடைந்தனர்.

இந்த நிலையில் சரத்குமார் திம்மூரில் உள்ள அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காதலன் இறந்த தகவல் நேற்று மாலை மாலதிக்கு கிடைத்ததையடுத்து மனம் நொறுங்கி போன அவர், காதலன் சென்ற இடத்திற்கே நாமும் சென்று விடுவோம் என்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top